மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட் (NLC India Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 21 மருத்துவ சார்ந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பின்படி Pharmacist Grade–B பணிக்கு 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு மாதம் ரூ.22,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
Ophthalmic Technician பணிக்கு 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கான சம்பளம் மாதம் ரூ.23,000 முதல் ரூ.95,000 வரை வழங்கப்படும்.
Theatre Assistant பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான சம்பளம் ரூ.20,000 முதல் ரூ.81,000 வரை வழங்கப்படும்.
மேலும் Audiologist and Speech Therapist பணிக்கு 1 காலியிடமும், Dental Mechanic பணிக்கு 1 காலியிடமும் உள்ளன. Audiologist and Speech Therapist பணிக்கு மாதம் ரூ.24,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். Dental Mechanic பணிக்கு ரூ.22,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து முழு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
வயது வரம்பு 1.2.2026 தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.236 செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினரும் ரூ.486 செலுத்த வேண்டும். கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 2, 2026.
என்எல்சி நிறுவனத்தில் மருத்துவ சார்ந்த பணியிடங்கள் – ஏப்ரல் 2 வரை விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Pharmacist, Ophthalmic Technician உள்ளிட்ட 21 மருத்துவ சார்ந்த பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Tags
#lic #job #exam #RBIRecruitment2026 #RBIJobs #AssistantJobs #BankJobs #GovernmentJobs #RBIAssistant #JobAlert #BankingCareer #IndiaJobs #TamilNews +2 Public Exam aiims BEL jobs 2026 Tamil bhel job Chennai Port Authority recruitment Education News Employment Office Tamil Nadu Government Engineer Vacancy Govt Job Registration Tamil groupexams NLC India Limited railway recruitment training Tamil Nadu RRB Group D 2026 RRB Group D training Sivagangai school TN Employment News tnjob tnpsc UPSC vao அரசு வேலைவாய்ப்பு 2026 இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை வேலைவாய்ப்பு மையம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதிவு
About the Author

AF themes
Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed












