Madurai Employment News

Latest Government Jobs , Exams & Education Updates

கால்நடை மருத்துவம், பி.டெக் படிப்புகளுக்கு மே 25 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் () கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் மே 25ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனில் தொடங்குகிறது.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், பேட்டை, உடுமலை மற்றும் தேனி வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட பி.வி.எஸ்.சி & ஏ.ஹெச் (B.V.Sc & A.H) படிப்பிற்கு மொத்தம் 660 இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கு தலா 60 மற்றும் 40 இடங்கள் உள்ளன.

அதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியிலும், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள இணைப்பு கல்லூரியிலும் உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் மற்றும் கோழியின தொழில்நுட்பம் உள்ளிட்ட 4 ஆண்டுகள் கொண்ட பி.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மூலம் ஜூன் 17ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர்கள் (NRI), அவர்களின் வாரிசுகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள் உள்ளிட்ட முழு விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.