அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சார்பில் 2026 ஆம் ஆண்டிற்கான பெரிய அளவிலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு AIIMS மருத்துவமனைகளில் 2,551 Nursing Officer (செவிலியர் அலுவலர்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 16 மார்ச் 2026க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்
பணியின் பெயர்: Nursing Officer
மொத்த காலியிடங்கள்: 2,551
முக்கிய காலியிடங்கள் (சில இடங்கள்)
பதிண்டா – 72
போபால் – 76
புவனேஸ்வர் – 55
தியோகர் – 104
கோரக்பூர் – 203
குவஹாத்தி – 78
கல்யாணி – 205
மங்களகிரி – 88
நாக்பூர் – 56
ரேபரேலி – 85
புது தில்லி – 282
பாட்னா – 168
ரிஷிகேஷ் – 64
ராய்ப்பூர் – 43
ஜம்மு – 54
மதுரை – 30
புதுச்சேரி – 88
காரைக்கால் – 383
எஸ்.ஜே.எச் மருத்துவமனை – 140
புது தில்லி ESIC – 219 உள்ளிட்ட பல மையங்கள்.
கல்வித்தகுதி
இந்திய நர்சிங் கவுன்சில் அல்லது மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரித்த கல்வி நிறுவனத்தில் இருந்து
B.Sc (Hons) Nursing / B.Sc Nursing அல்லது
Diploma in General Nursing & Midwifery (DGNM) முடித்திருக்க வேண்டும்.
இந்திய அல்லது மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பணி அனுபவம்
குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு
16.03.2026 தேதியின்படி 18 முதல் 30 வயது வரை.
அரசு விதிகளின்படி பிரிவுவாரியாக வயது தளர்வு வழங்கப்படும்:
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் – 10 முதல் 15 ஆண்டுகள் வரை.
சம்பளம்
மாதம் ரூ.9,300 – 34,800 வரை.
தேர்வு முறை
NORCET தேர்வு முறையின் கீழ்
முதல்நிலைத் தேர்வு
முதன்மைத் தேர்வு
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
SC / ST / EWS – ரூ.2,400
மற்ற அனைத்து பிரிவினரும் – ரூ.3,000
(ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை
AIIMS அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம்: www.aiimsexams.ac.in�
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2026










