Madurai Employment News

Latest Jobs & Emplyment Update in Madurai

பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு: UPSC மூலம் 933 பணியிடங்கள் – மே 24 முதல் நிலைத் தேர்வு

இந்த பணியிடங்கள் இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS), இந்திய வெளிநாட்டு சேவை (IFS) உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை பதவிகளுக்காக நிரப்பப்பட உள்ளன

Kumar Avatar

by

1 minute

Read Time

பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணியில் சேர சிறந்த வாய்ப்பாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மூலம் 933 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்கள் இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS), இந்திய வெளிநாட்டு சேவை (IFS) உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை பதவிகளுக்காக நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 24.02.2026 தேதிப்படி 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 02.08.1994க்கு முன்போ அல்லது 01.08.2005க்கு பின்போ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிமுறைகளின்படி ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை மூன்று கட்டங்களாக நடைபெறும். முதலில் முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination), அதன் பின்னர் மெயின் தேர்வு (Main Examination) மற்றும் இறுதியாக நேர்காணல் (Interview) நடைபெறும்.
தமிழ்நாட்டில் முதல் நிலைத் தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். மெயின் தேர்வு சென்னை நகரில் நடைபெறும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24 பிப்ரவரி 2026 ஆகும். முதல் நிலைத் தேர்வு வரும் மே 24, 2026 அன்று நடைபெற உள்ளது.
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான
https://upsc.gov.in/⁠ முகவரியை பார்வையிடலாம்.

About the Author

Latest News

View All

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

BlockSpare — News, Magazine and Blog Addons for (Gutenberg) Block Editor

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports