Madurai Employment News

Latest Government Jobs , Exams & Education Updates

மாவட்ட போட்டிகள் மூலம் விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை – மே 3க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2026–27 கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

வகுப்பு 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவுடன் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான தேர்வுப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் நடைபெறும். இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இருபாலருக்கும் நடத்தப்படுகின்றன. ஆண்களுக்கு மட்டும் கிரிக்கெட் தேர்வும் நடைபெறும்.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிறப்பு சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பள்ளி அடையாள ஆவணம், பொன்பைடு சான்று மற்றும் விளையாட்டு சாதனை சான்றிதழ்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3 மாலை 6 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். மேலும் விவரங்கள் தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.