நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா (KVS), நவோதயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் மொத்தம் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விவரத்தை, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் செளதரி எழுத்துப் பதிலில் வெளியிட்டார்.
அதில்,
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8,618 பணியிடங்கள்
நவோதயா பள்ளிகளில் 5,083 பணியிடங்கள்
காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு காரணம்
புதிய பள்ளிகள் துவக்கம்,
ஆசிரியர்கள் ராஜினாமா,
பதவி உயர்வு,
பணி இடமாற்றம் ஆகிய காரணங்களால் இந்த காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
தற்காலிக தீர்வு
ஆசிரியர் பற்றாக்குறையால் கற்றல் பாதிக்கப்படாத வகையில், தற்போது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர நியமனம் விரைவில்
இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் முழுநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
கூடுதல் தகவல்
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதுபோன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















