தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்சி (TANSI) நிறுவனத்தில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி ஓட்டுநர் (Driver) பணிக்கு 4 காலியிடங்களும், அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு 7 காலியிடங்களும் உள்ளன.
ஓட்டுநர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 34 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு விதிமுறைகளின்படி பிரிவு வாரியாக 37 வயது வரை தளர்வு வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி மார்ச் 31, 2026 மாலை 5 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
எண்.28, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600032.
8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் – டான்சி நிறுவனத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள்





